கொங்குநாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது என்பது உண்மையாக இருக்கும் எனில் அதை எதிர்த்து தமிழர்கள் கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று பல நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்குநாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது பற்றி இந்திய அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்த முயற்சி உண்மையாக இருக்கும் என்றால் அதை எதிர்த்து தமிழர்கள் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு என பிரித்து இரு மாநிலங்களாகும் கோரிக்கையைசிலர் எழுப்பினர். அப்போதும் தமிழர்களின் கடும் எதிர்ப்பின் விளைவாக அத்தகைய கோரிக்கை கைவிடப்பட்டது.சங்க காலத்திலிருந்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலம் வரை தமிழ்நாடு என்றும் ஒரே நாடாக இருந்ததில்லை.
மூவேந்தர்களும், பல மன்னர் குலத்தினரும் பிரித்து ஆண்ட சிறு சிறு நாடுகளாக தான் திகழ்ந்தது பிறகு அன்னியர்களின் படையெடுப்புக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகரம் என்று கூட்டுக்குள் தமிழகம் அடைக்கப்பட்ட தவித்தது .1956 ஆம் ஆண்டு விடுதலைக்குப் பிறகு தமிழ்நாடு முதன் முதலாக ஒன்றுபட்ட மாநிலமாக உருவானது. சில மாவட்டங்களை நாம் இழக்க நேரிட்டாலும் தமிழ்நாடு ஒற்றை மாநிலமாக திகழ்ந்தது. எனவே தமிழ் நாட்டைப் பிரிக்கும் செயல் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்துப் போராட நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.