மதுரையில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடற் தகுதி தேர்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு இம்மாதம் இறுதியில் இரண்டாம் கட்ட தேர்வு நடக்கிறது. போதிய பயிற்சி இல்லாததால் பலருக்கு போலீஸ் பணி கனவாகி விடுகிறது. இதனை தவிர்க்க 6 இடங்களில் இன்று முதல் 23ஆம் தேதி வரை ஓட்டப் பயிற்சி,கயிறு ஏறுதல் மட்டும் நீளம் தாண்டுதல் பயிற்சியை தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இலவசமாக போலீசாரை அளிக்கின்றனர். இந்த அரிய வாய்ப்பை யாரும் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories