பிரபல மலையாள இசையமைப்பாளர் முரளி சித்தாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் திருவனந்தபுரம் அருகில் வட்டியூர்கவு பகுதியில் உள்ள தொப்புமுக்கு பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் வீட்டில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக நாயிற்று கிலமை மாலை தொங்கிக் கொண்டிருந்தார்.
அதனைக் கண்ட உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு வயது 66. அவரின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவருக்கு மனைவி ஷோபனா குமாரி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.