நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை, ஜூலை 20 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்காக அமல்படுத்துவதாக மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் தினசரி இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். அதாவது மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா நிலைமையை தொடர்ந்து ககவனித்து வருவதாகவும், நோய்த்தொற்று பரவுவதை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.