சைபர் தாக்குதலுக்குள்ளான மாவட்டத்தில் சேவைகள் மற்றும் வர்த்தகங்கள் பாதித்துள்ள நிலையில் அந்த பகுதி மக்களுக்கு அரசு உதவிகளை வழங்குகிறது.
ஜெர்மனி நாட்டில் உள்ள Anhalt-Bitterfeld மாவட்டத்தில் உள்ள குறும்பர்கள் (Hackers) சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் தன்னைத்தானே பேரழிவு மாவட்டமாக Anhalt-Bitterfeld அறிவித்துக் கொண்டுள்ளது. இதனை அடுத்து ஜெர்மனியின் தகவல் பாதுகாப்பு பெடரல் அலுவலகம் , Anhalt-Bitterfeld டை சைபர் தாக்குதல் பேரழிவுக்குள்ளான முதல் மாவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பெடரல் அலுவலகர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் மாவட்டத்தின் மொத்த சேவைகள் மற்றும் பொதுமக்களின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் இதனை சீர்படுத்த ஒரு வார காலம் ஆகும் என்பதால் நிதியுதவி அளிக்க முடியாது என உள்ளூர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தினால் அந்த மாவட்டத்தில் வாழும் 158000 பேருக்கு பெடரலின் உதவி கிடைக்கப் பெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்