முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோதாவரி படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் நிதி உதவியை அறிவித்தார்.
இதையடுத்து தகவலறிந்த இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தொடர்ந்து காணாமல் போன 20 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். உள்ளூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
இதனிடையே படகு கவிழ்ந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் முதல்வர் ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் பேசினார். உடனடியாக அவர்களை மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார். மேலும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் நிதி உதவியையும் அறிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து படகு சேவைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி படகு விபத்துக்கள் குறித்து அவர் தீவிர கவலை தெரிவித்ததோடு, கடற்படை மற்றும் ஓ.என்.ஜி.சி ஹெலிகாப்டர்களை நிவாரண நடவடிக்கைகளில் பயன்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். கோதாவரி நதியில் படகு நடவடிக்கைகள் குறித்த உரிமங்கள், உடற்பயிற்சி மற்றும் பிற விவரங்களை சரிபார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.