Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 20 இடங்களில் சிறப்பு முகாம்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 20 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயதிற்கு 20 இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கின்றது. அதன்படி, குருந்தன்கோடு, ஆறுசேதம், கோதநல்லூர், இடைக்கோடு என பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் வாடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 2-வது கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த முகாம்களில் ஆன்லைன் மூலம் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் டோக்கன் வழங்கப்படுகிறது.

இதனையடுத்து பூதப்பாண்டி, கன்னியாகுமரி, குளச்சல், சேனம்விளை, குழித்துறை, கருங்கல், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் போன்ற அரசு மருத்துவமனைகளிலும், நாகர்கோவில் வேத நகர் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியிலும் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்களில் பொதுமக்களுக்கு நேரடியாக டோக்கன் விநியோகம் செய்யப்படுகின்றது. எனவே இந்த மாவட்டத்தில் இதுவரையிலும் 8 லட்சத்து 43 ஆயிரத்து 265 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தற்போது 224 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பின் இந்த மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்த 88 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |