Categories
உலக செய்திகள்

கலந்து போடாதீங்க…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…. தலைமை விஞ்ஞானியின் தகவல்….!!

உலக நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா வைரஸிற்கு எதிராக செலுத்தி வரும் தடுப்பூசிகளை கலந்து போடுவதால் பெரும் ஆபத்து உருவாகும் என உலக சுகாதார தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த தடுப்பூசிகளை மக்கள் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணையாக போட்டுக்கொண்டு வருகின்றனர். அதிலும் சில நாடுகள் பக்கவிளைவுகளிலிருந்து தப்பிப்பதற்காக முதல் தவணை செலுத்திய பின் இரண்டாவது தவணை வேறொரு நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகளை மக்களுக்கு பரிசீலிக்கின்றனர். மேலும் சில நாடுகள் உருமாறிய கொரோனா வைரஸ்களான பீட்டா , டெல்டா போன்றவற்றிக்கு எதிராக  சிறந்த பலனை அளிக்கும் தடுப்பூசிகளை கலந்து போடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சில ஏழை நாடுகள் தடுப்பூசியின் பற்றாக்குறையினால் வேறுவழியின்றி வெவ்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும்  தடுப்பூசிகளை கலந்து செலுத்தும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளன. இது குறித்து உலக சுகாதார தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் “தடுப்பூசி மருந்துகளை கலந்து போடுவதனால் ஒரு சரியான தரவு மற்றும் பாதுகாப்பில்லாத நிலை உண்டாகும். மேலும் இது ஒரு ஆபத்தான நிலையை உருவாக்கும்” என ஆன்லைன் மாநாட்டில் கூறியுள்ளார்.

Categories

Tech |