விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீராங்கனையின் அனுபவங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி நிறுவனமான Virgin Galactic மூலம் மெக்சிகோவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை Spaceship to Unity என்ற ஓடத்தின் மூலம் விண்வெளிக்கு 6 பேர் கொண்ட குழு ஒன்று சென்றுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா பந்த்லா ஆகியோர் சென்றுள்ளனர். இவர் ஆந்திராவில் உள்ள குண்டூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். இந்திய விண்வெளி வீராங்கனைகளான கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ்க்கு பிறகு சிரிஷா பந்த்லா விண்வெளிக்கும் செல்லும் 3 வது பெண்மணி என்னும் பெருமையை தட்டிச் செல்கிறார்.
இந்த நிலையில் விண்வெளிக்கு சென்ற சிரிஷா பந்த்லா அங்கிருந்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “எனது வாழ்க்கையின் திருப்பு முனையாக இந்த விண்வெளி பயணம் அமைந்துள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். மேலும் இது நம்ப முடியாததாக உள்ளதால் பிரமிப்பில் இருக்கிறேன் என்றும் இந்த பயணத்தின் அனுபவம் குறித்து சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை” என கூறியுள்ளார்.