Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பகுதியில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும்அவரது  உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மனமுடைந்த முஹம்மது ஹனிபா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முகமது ஹனிபாவை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹனிபா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |