நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற டிரைவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பில்லூரில் வசித்து வந்த வேலுமணி(47) தற்போது மனைவி கார்த்திகா(43) மற்றும் குழந்தைகளுடன் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் வசித்து வருகின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலுமணி நேற்று முன்தினம் சொந்த ஊரான பில்லூருக்கு அவரது தாயை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து செல்லும்வழியில் வேலுமணியில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் வேலுமணியை மீட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.