சாலையில் சைக்கிள் ஊர்வலதோடு சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைக்க கோரி கோஷம் எழுப்பி காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல்களின் விலைகளை குறைக்குமாறு சைக்கிள் ஊர்வலதோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி உள்ளனர்.
இதனை அடுத்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இதில் தலைவர் தங்கவேல், நிர்வாகிகளான ராஜேந்திரன், மணி, சென்னகேசவன், ரமேஷ், வேடி, சேகர், தகடூர் வேணுகோபால், தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.