Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்டத்தை எட்டிய ‘வலிமை’ படப்பிடிப்பு… வெளிநாடு செல்ல தயாராகும் படக்குழு…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தின் முக்கியமான ஒரு சண்டைக் காட்சியை ஐரோப்பாவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

Valimai First Look Poster: Four new posters of Thala Ajith with bikes and  guns look terrific | PINKVILLA

ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை . இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்த மாதம் இறுதியில் ஐரோப்பா செல்ல வலிமை படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் அங்கு பத்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதோடு வலிமை படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் வலிமை படம் ரிலீஸாக உள்ளது.

Categories

Tech |