Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சி.. இடைக்கால ஜாமீன் அளித்த நீதிமன்றம்..!!

பண மோசடி செய்த வழக்கில் கைதான வைர வைரவியாபாரி மெகுல் ஷோக்சிக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க டொமினிகன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைர வியாபாரியான மெகுல் ஷோக்சி மற்றும் அவரின் உறவினர் இருவரும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் கிளையில் 13,500 கோடி ரூபாயை கடனாக பெற்றுவிட்டு மோசடி செய்தனர். எனவே சிபிஐ விசாரிக்க தொடங்கியவுடன், இருவரும் தலைமறைவானார்கள். அப்போது லண்டனில் நிரவ் மோடி கடந்த 2019 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் கைதானார்.

மெகுல் ஷோக்சி ஆன்ட்டிகுவா தீவில் தஞ்சமடைந்தார். மேலும் அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருந்தார். அதன் பின்பு கடந்த மே மாதம் 23ஆம் தேதியன்று அங்கிருந்து காணாமல் போனார். படகு மூலம் அங்கிருந்து தப்பி டொமினிக்கன் சென்ற போது அங்குள்ள அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார்.

எனவே டொமினிக்கன் நீதிமன்றத்தில், சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக வழக்கு தொடரப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க அனுமதி அளித்துள்ளது. அதாவது ஆன்டிகுவாவிற்கும், பார்படாஸ் நாட்டிற்கும் மருத்துவ சிகிச்சைக்காக பயணிக்க இந்த ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 2.75 லட்சம் இதற்காக செலுத்த வேண்டும் என்றும் மருத்துவ சிகிச்சைக்கு பின் உடனடியாக டொமினிக்கன் திரும்பிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |