Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செஞ்சு கொடுங்க…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு…. நூதன முறையில் ஆர்ப்பாட்டம்….!!

விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் ஏராளமான விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும்  பருத்தி போன்ற பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்யுமாறும், நெல்லை அரசு கொள்முதல் செய்வதுபோல  தானிய பயிர்களுக்கும் கொள்முதல் நிலையங்கள் அமைத்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் போலி உரங்கள் மற்றும் விதைகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களை அனுமதிக்கக் கூடாது எனவும் கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற பின்னர் விவசாயிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.

Categories

Tech |