Categories
மாநில செய்திகள்

தொண்டர்களின் விருப்பப்படி…. நிச்சயம் தலைமை ஏற்பேன்…. பரபரப்பு ஆடியோ…!!!

கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது.  இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.

இதையடுத்து சசிகலாவுடன் பேசியதாக அதிமுக தொண்டர்கள் சிலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில், நான் அதிமுக பொதுச்செயலாளராக வரவேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். தொண்டர்களின் விருப்பப்படி நிச்சயம் தலைமை ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |