சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகர் அடுத்த இந்திராநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலாய்கார் வட்டம் என்ற இடத்தில் காவல்துறையினர் வருவதை கண்டு பெண் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அந்தப் பெண்ணை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டபோது அவர் விற்பனை செய்வதற்காக 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனைடுத்து பெண்ணிடம் இருந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு இதில் ஈடுபட்ட நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ராணி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.