ஆலங்குடி ஊராட்சி மன்றம் சார்பாக பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் ஊராட்சி மன்றம் சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவரான வக்கீல் மோகன் தலைமை தாங்கினார். மேலும் துணைத்தலைவர் ராசாத்தி சின்னப்பா முன்னிலையில், ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்று பேசியுள்ளார்.
இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் வாங்கப்பட்டு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு வகைப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமில் தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் கோபால், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தி, ஊராட்சி உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.