Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்து…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமானில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைவேலன தலைமை தாங்கினார்.

மேலும் மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, ராஜீவ்காந்தி, பஞ்சாயத்து ராஜ் பிரிவு ஒருங்கிணைப்பாளர் குலாம்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து வட்டார தலைவர் முத்துக்குமரன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வரன் மற்றும் பெரும்பாலானோர் இதில் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க கோரி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் நகர தலைவர் செந்தில்வேலன் இறுதியில் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |