Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் விஜய்க்கு அபராதம்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

நடிகர் விஜய்க்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், நடிகர் விஜய் ஒரு லட்சம் அபராத தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் உயர் நீதிமன்ற நீதிபதி எம்எஸ் சுப்பிரமணியம் கூறுகையில் “நடிகர்கள் உண்மையான ஹீரோக்கள் ஆக இருக்கவேண்டும். சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் இவர்கள் வரிஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல. நாட்டிற்கு குடிமகனாக இருந்து கட்டாயம் செய்ய வேண்டிய பங்களிப்பு” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |