தமிழகத்தில் கொரோனா ஊடரங்கில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது அடியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மே 24-ஆம் முழு ஊடரங்கு போடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி இரவு 8 மணி வரை செயல்படும் கடைகள் 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் 9 மணி வரை அனைத்து கடைகளும் செயல்பட்டுள்ளன. மேலும் இந்த தளர்வுகள் 19 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து புதுச்சேரிக்கு அரசு பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டதால் பெரம்பலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.