Categories
உலக செய்திகள்

“ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை நிறுத்துங்கள்!”.. சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை..!!

அமெரிக்க அரசு, தென்சீன கடலில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை சீனா நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீன அரசு, தென் சீனக்கடலின் பல தீவுகளுக்கு உரிமை கொண்டாடுகிறது. எனினும் வியட்நாம்,  தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள், அவை தங்களுடையது என்று கூறுகிறது. இதனால் இந்த நாடுகள் மற்றும் சீனாவிற்கு இடையில் பல வருடங்களாக சண்டை ஏற்பட்டு வருகிறது.
மேலும் இந்த பிரச்சனையில், சீனாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது. தென்சீனக்கடலில் கடல்சார் உரிமைகள் குறித்து கடந்த வருடத்தில் ஜூலை மாதம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொள்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போதுள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடன், தென்சீனக்கடல் பிரச்சனையில் முன்புள்ள அரசின் கொள்கையை தொடர்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த பிரச்சனையில், ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதை சீனா நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.
அமெரிக்க வெளியுறவு மந்திரியான, ஆண்டனி பிளிங்கன் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, ‘‘ சீனா, தென்கிழக்கு ஆசிய கடலோர நாடுளை பயமுறுத்திகிறது. இது தென்சீனக்கடலின் கடல் ஒழுங்கு முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
சர்வதேச சட்ட அடிப்படையில், சீனா அதன் கடமைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும். சீனா, கடல் ஒழுங்கு முறைக்கு உறுதியளித்திருப்பதை உறுதிப்படுத்தும் செயல்பாடுகளை செய்ய  வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |