Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது…. எடப்பாடி பழனிசாமி ட்வீட்…!!!

நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய அமைசச்ர தர்மேந்திர பிரதான் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். அதேவேளையில், மாணவர்கள் தேர்வுக்கு தயார இருக்க வேண்டும் என்று கூறினார். இத்தகைய அறிவிப்பால் மாணவர்கள் மிகுந்த குழப்பத்துக்கு ஆளாகியுள்ள கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ” இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா?”என மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு, மாண்புமிகு அம்மா அரசு செயல்படுத்திய “நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல்,தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அம்மா அரசு அளித்தது போல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |