பெண்கள் அரசு டவுன் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கட்டணமில்லா டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு மு.க ஸ்டாலின் அவர்கள் முதற்கட்டமாக 5 முக்கிய அம்சங்களில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி கிராமம் ஆகும். அந்த கிராமப் பகுதியில் இருந்து வரும் டவுன் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் அலைமோதியது.
இதனையடுத்து பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஒரு நாளைக்கு பேருந்தில் எத்தனை பெண்கள் பயணிக்கிறார்கள் என்பதை எளிதாக கணக்கிடமுடியும். தமிழக அரசின் இந்த அறிவிப்பானது மகளிர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.