Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பான செயல்… மொத்தமாக 250 லிட்டர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் சுடுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது சட்ட விரோதமான சாராயம் விற்பனை செய்த சின்னப்பன், இருதயராஜ், அய்யாக்கண்ணு, கார்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 250 லிட்டர் சாராயம் மற்றும் 1150 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |