Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குளிக்க சென்ற வாலிபர்…. நடந்த துயர சம்பவம்…. வேலூரில் சோகம்….!!

குளிக்கச் சென்ற வாலிபர் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காளியம்மன்பட்டி சாமியார் மலை எம்.ஜி.ஆர். நகரில் துளசிராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் மாலை வேளையில் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்ற போது 50 அடி தண்ணீருக்குள் உள்ள சேற்றில் சிக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் தண்ணீர் 50 அடி இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் உத்தரவின்படி உதவி கலெக்டர் ஷேக் மன்சூர், தாசில்தார் வத்சலா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் தயாளன், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சிசில் தாமஸ் போன்ற வருவாய்த்துறையினர், காவல்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் அங்கங்கே முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

அதன்படி குடியாத்தம் நகராட்சி, வேலூர் மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனம் என 5 வாகனத்தின் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்தபோதும் குறையவில்லை. இதனையடுத்து பாதளகொலுசு மூலம் கிணற்றில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு பின் அதற்குள் பாதாள கொலுசு மூலமாக ஆகாஷின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |