தற்காலிகமாக பணிபுரிந்து வந்த செவிலியர்களை திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று கூறியதினால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக 143 செவிலியர்கள், 20 சுகாதார ஆய்வாளர்களை தற்காலிக பணிக்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் திடீரென அவர்களை வேலைக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பளம் வழங்குதல் மற்றும் பணி நீட்டிப்பு குறித்து அவர்கள் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ தரையும் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.
அப்போது தங்களின் சம்பளம் உடனடியாக வழங்குவதற்காகவும் மற்றும் பணி நீட்டிப்பு குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்வதாகவும் கலெக்டர் கூறியுள்ளார். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து திரும்பிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பளம் வழங்கல் மற்றும் பணி நீட்டிப்பு குறித்து 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு அவர்கள் சம்பளம் வழங்கல் மற்றும் பணி நீட்டிப்பு கோரி கோஷம் எழுப்பியுள்ளனர். அதன்பின் இந்தப் போராட்டம் பற்றி அவர்கள் கூறும்போது, தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்த்து வந்த நாங்கள் எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தையும் பிரிந்து அரசு மருத்துவமனையில் கொரோனா பணியை மேற்கொண்டு வந்தோம் எனவும், ஆனால் திடீரென எங்களை வேலைக்கு வர வேண்டாம் என கூறியதால் தாங்கள் வேலை இன்றி சிரமப்படுகிறோம் எனவும், அவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் இதுவரை பார்த்து அதற்கான சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் தங்களின் பணிகளை நீட்டிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுத்துள்ளனர். பிறகு அதை வாங்கிக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் திடீரென கலெக்டர் அலுவலகத்தை செவிலியர்கள் முற்றிய விட்டதினால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டுள்ளது.