உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உலக நாடுகள் முழுவதும் பல தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகின்றன.
ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசி அரிதான நரம்பு கோளாறுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட 12.8 மில்லியன் ஜான்சன் தடுப்பூசிகளின் குயிலின் பார் சிண்ட்ரோம் பாதிப்புகளுடன் 100 அறிக்கைகள் அமெரிக்க தடுப்பூசி பாதகாணிக்கை அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.