Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா….? அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

தனியார் கூரியர் அலுவலகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெட்போர்டு பகுதியில் தனியார் கூரியர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் காலையில் அலுவலகத்திற்கு ஊழியர்கள் சென்ற போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு உள்ளே சென்று பார்த்த போது வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்த 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக குன்னூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூரியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |