பேஸ்புக் அதன் பயனர்களுக்கு அவர்களின் ப்ரொபைலை லாக் செய்வதற்கான திறன் உள்ளிட்ட தனியுரிமை விருப்பங்களை வழங்குகிறது. பயனரின் ப்ரொபைலை லாக் செய்வதன் மூலம், பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு ப்ரொபைல் விபரங்களை வரையறுக்கப்பட்ட பார்வையை மட்டுமே காட்டுகிறது.
லாக் செய்யப்பட்ட ப்ரொபைல் டைம்லைன், ப்ரொபைல் படம் மற்றும் கவர் போட்டோ, ஸ்டோரீஸ் மற்றும் நியூ போஸ்ட் புகைப்படங்கள் மற்றும் இடுகைகளை நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும். மேலும், உங்களின் கணக்கில் உள்ள ‘பப்ளிக்’ பதிவுகள் இனி பொதுவில் இருக்காது மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
உங்கள் பேஸ்புக் ப்ரொபைலை லாக் செய்ய விரும்பினால், நீங்கள் அதை மொபைல் பயன்பாட்டிலிருந்து அல்லது உங்கள் டெஸ்க்டாப் மூலமாகச் செய்யலாம், இருப்பினும், பேஸ்புக்கின் டெஸ்க்டாப் பதிப்பில் உங்கள் ப்ரொபைலை லாக் செய்ய நேரடி விருப்பம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஆனால், ஒரு மாற்று வழி உண்டு. இந்தப் பதிவில் Android மூலம் எப்படி உங்கள் பேஸ்புக் ப்ரொபைலை லாக் செய்வது என்று பார்க்கலாம்.
பேஸ்புக் பயன்பாட்டைத் திறந்து உங்கள் ப்ரொபைலை கிளிக் செய்யவும். ‘Add to Story’ என்பதற்கு அடுத்தபடியாக மூன்று புள்ளிகள் கொண்ட மெனு ஐகானைத் கிளிக் செய்யவும். இங்கே, நீங்கள் Lock Profile விருப்பத்தைப் பார்க்க முடியும், அதைக் கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் உங்கள் ப்ரொபைல் லாக் செய்யப்பட்டால் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய ஒரு சுருக்கத்தை உங்களுக்குத் தரும்.
அதில் உள்ள Lock Your Profile விருப்பத்தைக் கிளிக் செய்யுங்கள். ‘You Locked Your Profile’ என்று பாப்-அப் மெசேஜ் ஒன்றை நீங்கள் காண முடியும், இப்போது OK என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் உங்களின் ப்ரொபைல் லாக் செய்யப்பட்டது.