Categories
உலக செய்திகள்

என்ன…! உயர் அதிகாரிகளுக்கு 15 ஆண்டுகால சிறையா…? ஆட்சியைக் கவிழ்க்க நடத்தப்பட்ட சதி….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஜோர்டான் நாட்டில் நடைபெற்றுவரும் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு சதி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகால சிறை தண்டனையை விதித்துள்ளது.

ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வரும் 2 ஆம் அப்துல்லாவின் மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு சதி நடந்துள்ளது. இதற்கு தொடர்புடையதாகக் கூறி மன்னரின் சகோதரரான ஹம்ஸா பின் உசேன் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அதன்பின் 2 நாட்கள் கழித்து அரசியலமைப்பு சட்டத்திற்கு இணங்கி நடப்பதாக ஹம்சா பின் உசேன் கடிதம் ஒன்றை எழுதி உறுதி அளித்ததால் அவர் வீட்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்தது தொடர்பாக தலைமை நீதிபதி மற்றும் மன்னரின் நெருங்கிய உறவினர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் 18 பேரில் 2 பேர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது தலைமை நீதிபதி மற்றும் மன்னரின் உறவினர் 2 பேர் மீது மட்டும் தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்ததில் இவர்கள் மீதான குற்றம் அங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் 2 பேருக்கும் நீதிபதி 15 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |