Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“3 மாதங்கள் கொடுக்கல”…. பணியாளர்களின் முற்றுகை போராட்டம்…. உறுதியளித்த அதிகாரிகள்…!!

சம்பளம் வழங்காததால் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப் பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு  ஊரக வளர்ச்சி பொதுச்செயலாளர் கே. ஆர்.கணேசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது பணியாளர்கள், கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்த எங்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் பொருளாதார சிக்கல் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு நிலுவைத் தொகையுடன் கூடிய சம்பளத்தை வழங்குமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த பிறகு ஊராட்சி பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |