இரு கோள்களும் நெருங்கி வரும் அற்புத நிகழ்வானது இன்று இரவு வானில் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வானில் பல அரிய சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்குவது போல இன்று இரவு வானில் தெரியும். அந்த சமயத்தில் இரு கோள்களுக்கிடையே வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு கோள்களுக்கு இடையில் சுமார் 4 டிகிரி தொலைவில் பிறை சந்திரன் தென்படும்.
மேலும் இந்த நிகழ்வை மேற்கு வானத்தில் மேகம் இல்லாத இடங்களில் நன்றாக பார்க்க முடியும். இதனை அடுத்து இந்த இரு கோள்களும் ஜூலை 13 ஆம் தேதிக்கு பிறகு ஒன்றை ஓன்று விலகிச் சென்று விடும். இந்த இரு அரிய நிகழ்வுகளை பொதுமக்கள் வெறும் கண்களாலோ அல்லது தொலைநோக்கி மூலமாகவோ கண்டுகளிக்கலாம் என்று கூறியுள்ளனர்.