திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு கௌரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இசையமைப்பாளர் தினா தலைவராக உள்ளார். இந்நிலையில் சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு கௌரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் அலுவலகத்திற்கு தினாவும் சங்க உறுப்பினர்களும் நேரில் சென்று கமல்ஹாசனிடம் கௌரவ உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்கள். திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் கமல்ஹாசன் இணைந்தது சங்கத்துக்கும் இசைக் கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக தினா கூறியுள்ளார்.
‘