கியூபாவில் அமைதியான முறையில் போராட்டம் செய்யும் பொது மக்களை குறிவைத்து அந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கியூபாவில் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை கொரோனாவின் மூன்றாவது அலை போன்ற மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியும் கியூபா அரசுக்கு எதிராக அந்நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க நாட்டின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வாறு தங்களுடைய நாட்டில் போராட்டம் நடைபெறுவதாக கியூபா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து கியூபா போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்குவதற்காக பெரிய அளவில் நடவடிக்கையை கையாண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து “கியூபா போராட்டக்காரர்களை குறிவைத்து எடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.