அரியலூர்- பெரம்பலூரில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வின்படி கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதில் ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் செயல்பாடுகள் மே 12-ஆம் தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டது. அதன்பின் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் திருச்சியிலிருந்து பெரம்பலூர் வழியாக புதுச்சேரிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.