சட்டவிரோதமாக மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு வாலிபரை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்பலவர் கட்டளை காந்தி நகர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் அந்த ஆட்டோவில் மருதையாற்று படுகை பகுதியிலிருந்து வி.கைகாட்டிக்கு மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுண்டக்குடி தெற்கு தெருவில் வசித்து வரும் டிரைவர் மணிகண்டனை கைது செய்ததோடு, அவரது ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.