பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவரான ராஜகுமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இவர்கள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூண்டு வரை சைக்கிள்களில் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை கூறைநாடு காமராஜர் மாளிகைலிருந்து பேருந்து நிலையம் வரை மாவட்ட தலைவரான ராஜகுமார் எம்.எல்.ஏ ஊர்வலம் நடத்த முடிவெடுத்துள்ளார். ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் காந்தி சிலையின் முன்பே தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.