நீண்ட நாட்களுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பொது போக்குவரத்திற்கு தடை விதித்தது. மேலும் தமிழக பேருந்துகளை புதுச்சேரி மாநிலம் வழியாக இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2 மாதமாக புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கவில்லை. இதன்காரணமாக விழுப்புரம் மாவட்ட மக்கள் புதுச்சேரிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் ஒரு சிலர் மட்டும் கார், இருசக்கர வாகனங்களில் சென்று வந்தனர்.
ஆனால் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி தமிழக பேருந்துகளை புதுச்சேரி மாநிலத்திற்கு இயக்குவதற்கு அரசு அறிவிப்பு வழங்கியுள்ளது. அந்த அறிவிப்பிற்கு அம்மாநில அரசும் அனுமதி கொடுத்துள்ளது. இதனையடுத்து சுமார் நீண்ட நாட்களுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதனைதொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பாக 180 பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்பின் பயணிகள் தங்களது சொந்த வேலை என பல்வேறு காரணங்களுக்காக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் பேருந்துகளில் ஏறி சென்றுள்ளனர். எனவே கொரோனா தொற்று பரவாத வகையில் பயணிகள் முககவசம் அணிந்தும், இடைவெளியை கடைப்பிடித்தும் சென்றுள்ளனர். இவ்வாறு 2 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.