சமத்துவபுரத்தில் அருந்ததிய சமுதாய மக்கள் வீடு கேட்டு திரண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள முள்ளிசெவல் சமத்துவபுரத்தில் அருந்ததிய சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் வீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக திரண்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.