Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்காத மத்திய அரசு… கோஷங்களை எழுப்பிய கட்சியினர்… நூதன முறையில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர் என்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நகர தலைவர் கோபி, மாவட்ட பொறுப்பாளர் பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுசாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் துல்கிப், கோபால் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் சூடம் ஏற்றியும் பல்வேறு நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல் திருப்புல்லாணி பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |