மாணவர்களுக்கு நேரடியாக சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சில ஆசிரியர்கள் மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு பாடங்களை எளிதில் கற்பதற்கு முடிகிறது.
இதனையடுத்து ஒரு மரத்தடியில் அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமர்ந்து பாடங்களை கற்றனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் பாடங்களை மாணவர்கள் தவறாது பார்த்து பயில வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் அகஸ்டினா கல்வி பயில விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.