சேத்தூர் மேட்டுப்பட்டி வேணுகோபாலசாமி கோவிலில் வருஷாபிஷேக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி வேணுகோபால சாமி கோவிலில் வருடந்தோறும் வருஷாபிஷேக திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி இந்த ஆண்டும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து, ஹோம குண்டம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டது.
இதனையடுத்து சாமிக்கும், கோபுர கலசத்துக்கும் புனித நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின் பெருமாள் மற்றும் தாயாருக்கும் திருக்கல்யாண சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.