Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் என ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Hansika Motwani to team with Dhanush once again? | Tamil Movie News - Times  of India

மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிகை ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷ், ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‌

Categories

Tech |