Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடையாளம் தெரியாத பிணம்… கொலையா… தற்கொலையா…? பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 55 வயதான அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை ரயில்வே காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பரமக்குடி மருத்துவமனைக்கு உடற்கூராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில் அந்த நபர் ரயிலில் அடி பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும், தண்டவாளத்திற்கு ஏன் வந்தார் என்பது பற்றியும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |