கம்பு ரொட்டி
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி- 4
பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கம்பு மாவுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் தோசைக்கல்லில் மாவை ஊற்றி , ரொட்டிகளாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். ரொட்டிகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, ரொட்டித் துண்டுகளை சேர்த்து கிளறி , கொத்தமல்லி தூவி இறக்கினால் கம்பு ரொட்டி தயார் !!!