Categories
உலக செய்திகள்

கிடைத்தது சுதந்திரம்…. பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…. குஷியான பிரித்தானியர்கள்….!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூலை 19 முதல் முழு ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்படும் என்பதை அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து பிரிட்டனின் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதால் மக்களும், அரசு அதிகாரிகளும் தளர்வுகளை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஜூலை 19 ஆம் தேதியை “Freedom Day) என்றும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு தளர்வு முடிவுகள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜூலை 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்படும் என்று கூறினார். இதனிடையே கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமில்லை என்றும் ஆனால் அதனை பின்பற்ற விரும்பும் அலுவலகங்கள் கட்டாயமாக்கி கொள்ள அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பொது இடங்களில் மக்கள் கூடலாம் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து அவர்கள் முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.

Categories

Tech |