தாய் திட்டிய காரணத்தால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கட்சிப்பட்டு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகம் என்ற மகன் உள்ளார். இவர் மதுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் பணிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பணிக்கு செல்லாமல் இப்படி ஊர் சுற்றுகிறார் என அவரது தாய் சண்முகத்தை கண்டித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த சண்முகம் பட்டுநூல் சத்திரம் பகுதியில் அமைந்திருக்கும் மாந்தோப்புக்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரது தற்கொலை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.