செட்டிநாடு முட்டைக் குழம்பு
தேவையான பொருட்கள் :
முட்டை – 5
சின்ன வெங்காயம் – 10
பச்சைமிளகாய் – 2
தக்காளி – 2
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் , சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் மல்லித்தூள் , மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, முட்டையை ஊற்றி 1 நிமிடம் கழித்து குழம்பில் ஊற்றி மூடி ஐந்து நிமிடம் குழம்பை வேக விடவும்.பின் இதில் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் செட்டிநாடு முட்டைக் குழம்பு தயார் !!!