தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கிராமத்திற்கு சென்று அங்கு அனைவருக்கும் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கே.தண்டா கிராமத்திற்கு சென்று பழங்குடி மக்களுடன் அமர்ந்து தனக்கான இரண்டாவது தடுப்பூசியை போட்டு கொண்டார். அத்துடன் அங்குள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் பழங்குடியின மக்கள் 100% தடுப்பூசி போடவேண்டும். தடுப்பூசி மீதான தயக்கத்தை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.